கல்லூரி மாணவியை கற்பழித்த 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில்
கல்லூரி மாணவியை கற்பழித்த 2 பேருக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
மும்பை,
தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அவர் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் காதலனுடன் கல்யாண் ரெயில்நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஆஷ்பக் அன்சாரி (வயது 25) மற்றும் அனில்குமார் ஆகியோர் கல்லூரி மாணவியின் காதலனை அடித்து விரட்டினர்.
பின்னர் அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கல்லூரி மாணவியை இழுத்து சென்று கற்பழித்தனர்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து, செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு மாணவியை கற்பழித்த 2 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 2 பேருக்கும் செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

Related Tags :
Next Story