சபாநாயகருக்கு ஆதரவாக முதல்-மந்திரி கொண்டு வந்த தீர்மானம்
எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சபாநாயகருக்கு ஆதரவாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிபெற்றது.
மும்பை,
சட்டசபையில் சபாநாயகர் ஹரிபாவு பாக்டே ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக கடந்த 5-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி நோட்டீஸ் கொடுத்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சபாநாயகரை ஆதரித்து நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். இதனை மாநில பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷின்டே(சிவசேனா) வழிமொழிந்தார்.
பின்னர் சபாநாயகருக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆளும் கட்சியினர் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து சட்டசபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து சபை கூடியதும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற கடந்த 5-ந் தேதியே நோட்டீஸ் கொடுத்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது திடீரென விவாதம் ஏதும் இன்றி நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றியது முறையாகாது என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது அவரை குறுக்கிட்டு பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் இதேபோல சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சட்டமன்ற நடைமுறைகள் அனைத்தும் முறைப்படி கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் தீர்மானம் குறித்து பேச அனுமதி கேட்டனர். ஆனால் சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி கிரிஷ் பாபத் இது குறித்து விவாதம் நடத்த மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story