நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 March 2018 9:30 PM GMT (Updated: 24 March 2018 1:31 PM GMT)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர், நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் ‘‘அம்மா வழியில் நல்லாட்சி அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி’’ என்ற கையேட்டினை வெளியிட்டார்.

புகைப்பட கண்காட்சியில், தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது தொடர்பான புகைப்படங்கள், இலவச அரிசி வழங்கும் திட்டம், ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், ஏரி, குளங்கள் குடிமராமத்து பணிகள் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம், கர்ப்பிணிகளுக்கான நலத்திட்டம், பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டம். மேலும், மாவட்டத்தில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், சுதா பரமசிவன், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, நெல்லை பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன், மாநகராட்சி தச்சை மண்டல உதவி ஆணையர் சுப்புலட்சுமி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாந்தி, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story