8 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு


8 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குடி சாலையில் 8 அடி ஆழத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி கார்ப்பரேசன் சாலையில் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் சார்பில் குடிநீர், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சாலை(பழைய மாமல்லபுரம் சாலை)யில் திடீரென நேற்று காலை 4 அடி அகலத்தில் 8 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை.

இந்த திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட தகவல் அறிந்ததும் சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மண்ணை கொட்டி பள்ளத்தை மூடினர்.  சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது ஏன் என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
1 More update

Next Story