போலீஸ் போல் நடித்து லாரி உரிமையாளரிடம் ரூ.8½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பெரம்பலூரில் போலீஸ் போல் நடித்து லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம் ரூ.8½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
நாமக்கல் மாவட்டம், தளிகை அருகே நடுவலூரை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 39). லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரான இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜூடன் (35) ஒரு லாரியை விலைபேசி வாங்க பெரம்பலூருக்கு நேற்று முன்தினம் இரவு காரில் வந்தார். அப்போது லாரி புரோக்கர்கள் நாமக்கல்லை சேர்ந்த கவுதமன், மதுரையை சேர்ந்த முத்து ஆகியோருடன் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். காலையில் விடிந்ததும் லாரியின் உரிமையாளர் வருவார், அவருடன் சென்று லாரி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை பார்வையிட்டு விலையை பேசி முடித்துவிடலாம் என கவுதமன், முத்து ஆகியோர் கதிரேசனிடம் கூறியிருக்கின்றனர்.
ஹவாலா பணம் கடத்துவதாக மிரட்டி...
நேற்று காலை லாரி உரிமையாளர் என கூறிக்கொண்டு ஒருவர் அந்த லாட்ஜூக்கு காரில் வந்தார். உடனே அவருடன் ரூ.8½ லட்சத்துடன் கதிரேசன், மோகன்ராஜ், புரோக்கர் முத்து ஆகியோர் அந்த காரில் ஏறிவிட்டனர். கவுதமன் லாட்ஜிலேயே தங்கிவிட்டார். பெரம்பலூர் நான்குரோட்டை கடந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காருடன் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் உள்ளிட்டோரை வழிமறித்தனர். போலீஸ் உடை அணிந்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நீங்கள் ஹவாலா பணம் கடத்துவதாக ரகசிய தகவல் வந்திருக்கிறது. எனவே எங்களுடன் வாருங்கள் விசாரிக்க வேண்டும் எனக்கூறி கதிரேசன், மோகன்ராஜை மிரட்டினர். அப்போது பயந்துபோன அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் பேசி கொள்ளலாம் என கூறினர்.
ரூ.8½ லட்சம் பறிப்பு
பின்னர் போலீஸ் போல் நடித்த அந்த கும்பல் தங்களது காரில் கதிரேசன், மோகன்ராஜை ஏற்றி கொண்டு புறப்பட்டனர். அவர்களை தொடர்ந்து மற்றொரு காரில் லாரி புரோக்கர் முத்துவும், லாரியை விற்க வந்தவரும் சென்றனர். தண்ணீர்பந்தல் அருகே வந்த போது திடீரென கதிரேசனிடம் ரூ.8½ லட்சத்தை போலீஸ் வேடமணிந்த அந்த கும்பல் பறித்தது. பின்னர் காரிலிருந்து கதிரேசன், மோகன்ராஜை கீழே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர். இதற்கிடையே மற்றொரு காரில் வந்தவர்களும் காணாமல் போய்விட்டனர்.
தனிப்படை போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன கதிரேசன், மோகன்ராஜ் தாங்கள் தங்கிய லாட்ஜூக்கு வந்து பார்த்த போது லாரி புரோக்கர் கவுதமனையும் காணவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெரம்பலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்தனர். பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
வலைவீச்சு
முதல் கட்டமாக அந்த லாட்ஜ் மற்றும் அதன் அருகேயுள்ள கடைகளிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் வேடமணிந்து வந்த கும்பல், லாரி புரோக்கர் என அறிமுகமானவர்கள், லாரியை விற்க வந்தவர் என அவர்கள் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் கருதுகின்றனர். லாட்ஜிலிருந்து கிளம்பிய அந்த காரின் நம்பரை விசாரித்த போது அது போலியானதாக இருந்தது தெரிய வந்தது. லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம் ரூ.8½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story