பங்குனி தேர் திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார்
பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜீயபுரம்,
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 3-ம் நாளான நேற்று ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பல்லக்கில் ரெங்கநாதர் எழுந்தருளி காவிரி ஆற்றின் வழியாக நள்ளிரவு 2 மணிக்கு மண்டபம் வந்தடைந்தார். நேற்று காலை மண்டபத்திற்கு அருகே உள்ள குளத்தின் பகுதிக்கு சென்ற ரெங்கநாதருக்கு கீரை சாதமும், தயிர் சாதமும் வைத்து படையல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ரெங்கநாதர் பல்லக்கில் எழுந்தருளி அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதிஉலா வந்தார். தொடர்ந்து ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ஆஸ்தான மண்டபத்தில் முத்து வளையம், காசுமாலை, அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை ஆஸ்தான மண்டத்திலிருந்து புறப்பட்டு காவிரி ஆற்றின் வழியாக மீண்டும் ஸ்ரீரங்கம் கோவிலை சென்றடைந்தார்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) தங்க கருட வாகனத்திலும், நாளை காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் நம்பெருமாள் உலா வருகிறார். 27-ந் தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில், கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.
28-ந் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு, கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 29-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார்.
30-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது. 1-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Tags :
Next Story