தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, புகைப்பட கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

பொதுமக்களுக்கு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கி கூற ஏதுவாக சிறப்பு புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

உதவி தொகை

தமிழக அரசின் திட்டங் களை விளக்கும் இந்த புகைப்பட கண்காட்சியில் விலையில்லா அரிசி, முதியோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த திருமண உதவி தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள் மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்த விளக்க புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நகராட்சி ஆணையர் ஜான்சன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் ராகவன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story