மும்பையில் சர்வதேச நிதி சேவை மையம் அமைக்கப்படும்


மும்பையில் சர்வதேச நிதி சேவை மையம் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 24 March 2018 11:48 PM GMT (Updated: 24 March 2018 11:48 PM GMT)

மும்பையில் சர்வதேச நிதி சேவை மையம் அமைக்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார்.

மும்பை,

மும்பையில் சர்வதேச நிதி சேவை மையம் அமைப்பது தொடர்பாக மராட்டிய சட்டமேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் தத் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அப்போது அவர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குஜராத்தில் செயல்படும் சர்வதேச நிதி சேவை மையம் முழு பயன்பாட்டை அடையும் வரையில் நாட்டில் மற்றொரு சர்வதேச நிதி சேவை மையம் நிறுவப்போவது இல்லை என்று கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பையில் சர்வதேச நிதி ேசவை மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நாட்டின் வேறு எந்த பகுதியைக் காட்டிலும் மும்பையே இதற்கு பொருத்தமானது எனவும், இதற்கு அவர் 100 சதவீதம் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

மும்பையே நாட்டின் பொருளாதார தலைநகரமாகும். இங்கு இயற்கையாகவே பல்வேறு வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. லண்டனில் 3 இடங்களில் சர்வதேச நிதி சேவை மையம் செயல்படுவது போல இந்தியாவிலும் பல இடங்களில் செயல்பட முடியும்.

சர்வதேச நிதி சேவை மையம் மும்பையின் முக்கிய பகுதியிலோ அல்லது ஏதேனும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலோ அமைக்கப்படும். இதற்கான திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story