கடலூர் பஸ்நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கடலூர் பஸ்நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.
கடலூர்,
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கடலூர் பஸ்நிலையத்தில் நடைபெற்றது. கலெக்டர் தண்டபாணி முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் பயன்படும் வகையில் அவர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அகன்ற வீடியோ திரையிலும் ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் சரவணன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் எழில்மதனா, நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பு, கந்தன், தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story