தமிழக அரசு லஞ்சம்-ஊழலை தடுக்க லோக்அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.மணி பேட்டி
தமிழக அரசு லஞ்சம்-ஊழலை தடுக்க லோக்அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என புதுக்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ், செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அறிவிக்காமல் மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி கண்காணிப்பு குழுவை அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை திசை திருப்பும் செயல். தமிழக உரிமையை பறிக்கும் செயல். தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து இருக்கும். காவிரி பிரச்சினையில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒரு அணியில் திரள வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவைகளால் நில உரிமையையும் நாம் இழந்து விட்டு, தற்போது நாம் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். இதை புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் உள்ளவர்களும் இந்தியர்கள் தான் என்று கருத வேண்டும். தரமான கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,800 கோடி நிலுவை தொகையை பெறமுடியாத சூழல் உள்ளது. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்தை ஏமாற்றி படுகொலை செய்யும் நட வடிக்கை. லஞ்சம் ஊழலை தடுக்க லோக்அயுக்தா சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story