அரியலூர் கலியுகவரதராச பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


அரியலூர் கலியுகவரதராச பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உள்ள கலியுகவரதராச பெருமாள் கோவில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

அரியலூர்,

அரியலூர் அருகே கலியுகவரதராச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பெருந்திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி வரதராச பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து கொடியை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எடுத்து வந்தனர்.

கொடியேற்றம்

தொடர்ந்து மேள தாளத்துடன், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் சூரிய வாகனம், வெள்ளி பல்லக்கு, புன்னை மர வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 2-ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்தை காண திருச்சி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 
1 More update

Next Story