சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு


சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோவில்களில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது. இதன் எதிரே ராம- சீதா தேவி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ராமநவமி விழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு ராமநவமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். இதற்கான ஏற்பாடுகளை திருகோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தில் ராமநவமி விழா நடந்தது. இதையொட்டி ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ராமாயண தரிசன சித்திரக்கூட முன்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை போன்றவை நடந்தது.

கொட்டாரம்

கொட்டாரம் நந்தவனத்தில் உள்ள ராமர்கோவிலில் ராமநவமி விழாவையொட்டி நேற்று அதிகாலையில் கலசபூஜை, காலை 8 மணிக்கு பஜனை, 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மதியம் அன்னதானம் போன்றவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

Next Story