வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மனைவி சாந்தி (வயது 42). கூலித்தொழிலாளி. கலைச்செல்வன் இறந்து விட்டார். சாந்தி நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சாந்தியின் வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம், தோடு என மொத்தம் 22 பவுன் நகைகளை திருடிச் சென்றார்.
இதற்கிடையே வீட்டிற்கு வந்த சாந்தி பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகைகள் திருடு போயிருந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் எனக்கூறப்படுகிறது.
போலீஸ் வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து சாந்தி ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story