திருப்பரங்குன்றம் அருகே தொண்டு நிறுவன நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை


திருப்பரங்குன்றம் அருகே தொண்டு நிறுவன நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2018 9:50 PM GMT (Updated: 25 March 2018 9:50 PM GMT)

திருப்பரங்குன்றம் அருகே தொண்டு நிறுவன நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த ஹார்விபட்டி அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). இவர் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அய்யனார் காலனியில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துடன் இருந்து வந்தாராம். இந்தநிலையில் நேற்று காலையில் அவர் தொண்டு நிறுவனத்தின் மாடியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி உஷா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story