திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.7,100 கோடி கடன் வழங்க இலக்கு, கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 2018-2019-ம் நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரத்து 100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் இந்திரவள்ளி, கனரா வங்கி மண்டல உதவி பொதுமேலாளர் மணிவண்ணன், முன்னோடி வங்கி மண்டல மேலாளர் சந்திசேகரன் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னோடி வங்கி மூலம் தயாரிக்கப்பட்ட 2018-2019-ம் நிதி ஆண்டுக் கான கடன் திட்ட கையேட்டை கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான கடன் இலக்கு ரூ.7 ஆயிரத்து 100.83 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் விவசாய கடனாக ரூ.5 ஆயிரத்து 87.63 கோடி, சிறு மற்றும் குறு தொழில்கடன் ரூ.927.20 கோடி ஆகும். பிற முன்னுரிமை கடன் திட்டத்துக்கு 1,086 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2017-2018-ம் நிதி ஆண்டுக்கான கடன் இலக்கு ரூ.6 ஆயிரத்து 615.73 கோடி ஆகும். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான கடன் இலக்கு அதிகரித்து உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மேலாளர்களும் திட்ட அறிக்கையை மாவட்ட தொழில் மையத்துக்கு வழங்கி செயல்படுத்த வேண்டும். கடன் இலக்கை பூர்த்தி செய்து திண்டுக்கல்லை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story