சத்துவாச்சாரி மலையில் தீ விபத்து


சத்துவாச்சாரி மலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 26 March 2018 4:02 AM IST (Updated: 26 March 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

வேலூர்,

சத்துவாச்சாரி மலையில் நேற்று மாலையும் மலையில் உள்ள செடிகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் மற்றும் காய்ந்த புற்களில் தீ பரவியது.

இதையறிந்த வனத்துறையினர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில் மலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின.


Next Story