மும்பை மாநகராட்சியின் 2 ஆயிரம் ஊழியர்கள் மீதான ஊழல் விசாரணை


மும்பை மாநகராட்சியின் 2 ஆயிரம் ஊழியர்கள் மீதான ஊழல் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2018 5:13 AM IST (Updated: 26 March 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் புகாரில் சிக்கிய 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மீதான விசா ரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சிக்கு மாநில அரசு உத்தர விட்டுள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி ஆண்டு தோறும் சிறிய மாநிலங்களுக்கு இணையான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. எனவே இது பணக்கார மாநகராட்சியாக கருதப்படுகிறது. இந்தநிலை யில் இங்கு அதிகளவு ஊழல், முறைகேடுகளும் நடந்து வருவதாக புகார்கள் எழுகின் றன.

மும்பை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் 2 ஆயிரத்து 1 பேர் மீதான ஊழல் புகார்கள் குறித்த விசாரணை பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

இது குறித்து கவுன்சிலர்கள் சமீபத்தில் மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களில் 1000-த்துக்கு மேற்பட்டவர்களின் கோப்புகள் வேண்டும் என்றே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் அனைவரின் மீதான விசாரணை முடிக்கப் படாமல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் விளக்கம் கேட்கும்போது அவர்கள் அனைத்து கோப்புகளும் பத்திரமாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மீதான விசாரணையை முடிக்க மாநில அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

கவுன்சிலர்களின் இந்த கடிதத்தை அடுத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விரைந்து விசாரித்து முடிக்க மும்பை மாநகராட்சிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மாநில அரசின் நகர்புற மேம்பாட்டு துறை கடிதம் வாயிலாக உத்தரவிட் டுள்ளது.

இதுகுறித்து மாநில நகர்புற மேம்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஊழல் புகாரில் சிக்கி உள்ள மும்பை மாந கராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2 ஆயிரத்து 1 பேர் மாநகராட்சியின் 261 துறை களை சேர்ந்தவர்கள்’’ என்றார்.

எனினும் அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த உத்தரவால் எந்த மாற்றமும் நடக்கப்போவ தில்லை என அவர்கள் கூறியுள் ளனர்.

இது குறித்து மாநில காங் கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறும்போது, “மும்பை மாநகராட்சி ஊழ லின் மையமாக இருப்பதை ஒட்டுமொத்த நாடே அறியும். சிவசேனா- பா.ஜனதாவி னருடன் இணைந்து மாநக ராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழலில் ஈடு பட்டு வருகின்றனர். 2 கட்சி களும் அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்படும் வரை ஊழலை தடுக்க முடியாது” என்றார். 

Next Story