கர்நாடக அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு கர்நாடக அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு பல்வேறு காலக்கட்டங்களில் வருகைதந்த கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களிடம் பெங்களூரு தமிழ்ச்சங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் வேண்டும் என்று சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு வந்தது. அதேப் போல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் தின பேரணியை தொடங்கிவைக்க வருகை தந்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடமும், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன் பெய்க் ஆகியோரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா, பெங்களூரு தமிழ்ச்சங்க விரிவாக்கப் பணிக்காக 10 ஏக்கர் நிலம் கேட்டு நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்று நிலம் ஒதுக்கி தருவோம். ஆனால் எவ்வளவு நிலம் ஒதுக்கி தரப்படும் என்பதை இப்போது கூற முடியாது. நிலத்தை அடையாளம் காண உத்தரவிட்டு இருக்கிறேன். நிலம் அடையாளம் காணப்பட்டதும் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி நிலம் அடையாளம் காணப்பட்டு 2 ஏக்கர் நிலம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் மற்றும் சங்க நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சங்க நிர்வாகிகள் மந்திரி கே.ஜே.ஜார்ஜூக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அப்போது சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், சங்கத்திற்கு அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலம், 65 ஆண்டு கால சங்கப்பணிகளுக்கு கிடைத்த கொடையாகும். ஒரு கோடி கர்நாடக வாழ் தமிழர்கள் சார்பில் பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.
மேலும் 2 ஏக்கர் நிலம் கிடைக்க ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டு விழா நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விழாவுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதில் அனைத்து தமிழர்களும் கலந்துகொண்டு நமது நன்றியை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தகவல் பெங்களூரு தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story