தஞ்சை மாநகராட்சி ஆணையரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை மாநகராட்சி ஆணையரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2018 10:45 PM GMT (Updated: 27 March 2018 7:08 PM GMT)

தஞ்சை மாநகராட்சி ஆணையரை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடியில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

தஞ்சை மாநகராட்சி ஆணையர் காளிமுத்துவை அவதூறாக பேசி அரசியல் கட்சி பிரமுகர் ஒரு தாக்க முயன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி ஊழியர்கள் நகராட்சி எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி ஊழியர் சங்க கிளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் லெட்சுமணன், நகராட்சி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 15 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர். அப்போது தஞ்சை மாநகராட்சி ஆணையரை அவதுறாக பேசி தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story