ஓய்வூதியம் பெறுபவர்கள் கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும் கலெக்டர் மலர்விழி தகவல்
தர்மபுரி மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கருவூலம் மற்றும் சார்கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த ஆண்டின் நேர்காணலுக்கு வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நேரில் ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலைநாட்களில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன் மூலம் நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் அட்டை, வருமான வரிகணக்கு எண், குடும்ப அடையாள அட்டை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்வு சான்றிதழ்
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்ணுடன் ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் அவற்றின் நகல்களுடன் வாழ்வுச்சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
வாழ்வுச் சான்று படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில, மத்திய அரசு அலுவலர்கள் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இருப்பிட முகவரி
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வெளிநாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்டு, நோட்டரி, வங்கிமேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுசான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களில் நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாதவர்கள் மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்போன், மின்னஞ்சல் முகவரி, ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதியர்கள் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை நேர்காணலுக்கு வர தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச்சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேரவும், ஓய்வூதியர் அடையாள அட்டை பெறவும் இதுவரை விண்ணப்பிக்காத ஓய்வூதியர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story