ஒருவர் மட்டுமே பங்கேற்ற போராட்டம்: பொதுமக்கள் வினோதமாக பார்த்துச் சென்றனர்


ஒருவர் மட்டுமே பங்கேற்ற போராட்டம்: பொதுமக்கள் வினோதமாக பார்த்துச் சென்றனர்
x
தினத்தந்தி 27 March 2018 10:30 PM GMT (Updated: 27 March 2018 8:07 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைப்பின் தலைவர் நேற்று சட்டசபை அருகே தனிநபராக போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்கவேண்டும், தீயணைப்பு துறையினருக்கு சம்பள உயர்வு மற்றும் சீருடை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைப்பின் தலைவர் நேற்று சட்டசபை அருகே தனிநபராக போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதிபெற்று சாமியானா அமைத்து இருந்தார். அதில் சுமார் 50 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் அங்கு வந்து அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்க ஆட்கள் தான் யாரும் வரவில்லை. இதையெல்லாம் பார்த்து அசராத அவர் காலியாக கிடந்த நாற்காலிகளை பார்த்தபடியே மைக் வைத்து ஒலிபெருக்கி மூலம் பேசிக்கொண்டிருந்தார். யாருமே இல்லாத நிலையில் தன்னந்தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்ட அவரை அந்த வழியாக சென்றவர்கள் வினோதமாக பார்த்தனர். 

Next Story