கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்கள் தள்ளுபடி; மறியலில் ஈடுபட்ட 21 பேர் கைது
வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தங்களது வேட்பு மனுக்களில் என்ன தவறு உள்ளது என்று கேட்டும், தவறில்லாத மனுக்களை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என கேட்டும் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில், 11 உறுப்பினர் பதவிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 7 பேரின் வேட்பு மனுக்கள் மட்டுமே சரியாக இருந்தது என கூறி மற்ற மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். இதனால் ஆத்திர மடைந்த வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தங்களது வேட்பு மனுக்களில் என்ன தவறு உள்ளது என்று கேட்டும், தவறில்லாத மனுக்களை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என கேட்டும் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் ஆண்டிமடம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் 11 உறுப்பினர் பதவிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் 7 பேரின் வேட்பு மனுக்கள் மட்டுமே சரியாக இருந்தது என கூறி மற்ற மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். இதனால் ஆத்திர மடைந்த வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

Related Tags :
Next Story