மிட்டாய் வியாபாரி கொலை: தலைமறைவான 2 பேரை தனிப்படை போலீசார் தீவிர தேடல்


மிட்டாய் வியாபாரி கொலை: தலைமறைவான  2 பேரை தனிப்படை போலீசார் தீவிர தேடல்
x
தினத்தந்தி 28 March 2018 3:15 AM IST (Updated: 28 March 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மிட்டாய் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான 2 பேரையும், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு சக்திவேல் (வயது 22), தட்சிணாமூர்த்தி (20) ஆகிய மகன்களும், கீதாலட்சுமி (19) என்ற மகளும் இருந்தனர். சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் மிட்டாய் வியாபாரம் செய்தனர். இந்த நிலையில் கீதாலட்சுமியை, அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் என்பவர் காதலித்துள்ளார். இதனை தனது சகோதரர்கள் கண்டித்ததால், கீதாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ்ராஜ் தரப்பினர், கடந்த 2016–ம் ஆண்டு தட்சிணாமூர்த்தியை கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சக்திவேலையும் கொலை செய்தனர். இதுகுறித்து 13 பேர் மீது திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கார்த்திக், தங்கம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2 பேரையும், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story