சிலரது கிறுக்கல்... பலருக்கு கஷ்டம்!
கையில் பேனா அல்லது பென்சில் கிடைத்துவிட்டால் போதும், ரூபாய் நோட்டையும் விட்டுவைப்பதில்லை சிலர்.
வெற்றிடத்தில் பெயரின் முதன்மை எழுத்து (இனிசியல்), தனக்கு பிடித்தவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பொன்மொழிகள், கவிதைகள், கூட்டல்-கழித்தல் கணக்கு என ரூபாய் நோட்டையே கிறுக்கி வைத்துவிடுவார்கள். ரிசர்வ் வங்கியின் ‘கிளன் நோட் பாலிசி’ என்ற கொள்கையில் ரூபாய் நோட்டுகளில் எழுதுதல் தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று வங்கிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. ஆனால் அதை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால், அதை வங்கிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000, 500, 200, 50 ரூபாய் புதிய நோட்டுகளில் எந்த கிறுக்கல்களும் இடம்பெறக்கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை கையாளும்போது அதன்மீது எந்தவித குறியீடுகளையும், தொகையையும் குறிப்பிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும் ரூபாய் நோட்டுகளில் பென்சில், பேனாக்களால் எழுதக்கூடாது என்று தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் புதிதாக வந்த ரூபாய் நோட்டுகளிலும் சிலரது கிறுக்கல்களை காணமுடிகிறது. இதன் பாதிப்பை டெபாசிட் எந்திரங்கள் நமக்கு உணர்த்தும். பழைய, அழுக்கான, கசங்கிப்போன ரூபாய் நோட்டுகளை அந்த எந்திரங்கள் எடுத்துக்கொள்ளாது. அந்த எந்திரங்களில் புத்தம்புதிய நோட்டுகளும், கசங்காத நோட்டுகளும், எந்தவித கிறுக்கல்களும் இல்லாத நோட்டுகளும்தான் உடனடியாக உள்ளிழுக்கப்படுகிறது.
எனவே, நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை கசக்காமலும், அதிக மடிப்பு மடிக்காமலும், கிறுக்கல்கள் செய்யாமலும் பாதுகாத்தால் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். எல்லோருடைய மனதிலும் ரூபாய் நோட்டு பாதுகாப்பு குறித்த எண்ணம் ஏற்படவேண்டும். அதுமட்டுமின்றி, கிழிந்த, பழைய, மோசமான நிலையில் உள்ள, கிறுக்கல்கள் கொண்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் முன்னறிவிப்பு செய்து பெற்றுக் கொண்டு அதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை வழங்கிட வேண்டும். விழிப்புணர்வு ஒருபுறமும், பழைய நோட்டுகளை மாற்றுதல் மறுபுறமும் ஒரே நேரத்தில் முனைப்புடன் நடந்தால் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு என்றென்றும் காக்கப்படும்.
-முக்கூடற்பாசன்

Related Tags :
Next Story