மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக்குழுவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில் 6 வார காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை இர்வின் பாலம் அருகே காந்திஜி சாலையில் நேற்று பகல் 12 மணிக்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், உழவர் உரிமை பேரியக்கம் தங்கராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழியான் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமகாலிங்கம், பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர்.
அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலெக்டர் வந்து உத்தரவாதம் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என கூறினர். பின்னர் கடும் போராட்டத்துக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் கடத்தும் வகையில் 6 வாரத்துக்குப்பிறகு தற்போது தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்போவதாக கூறி உள்ளது காலம் கடத்தும் செயல். கடந்த 22-ந் தேதி 4 மாநில அதிகாரிகளை அழைத்து பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறுகையில், உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லவில்லை என தெரிவித்தார். தற்போது விளக்கம் கேட்கப்போவதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது மத்திய அரசின் நயவஞ்சகத்தை காட்டுகிறது.
பிரதமர் மோடியின் இந்த தந்திரத்தை ஏற்றுக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனத்துரோகம் செய்துள்ளார். மக்கள் உரிமையை பாதுகாக்கவில்லை. குறித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் மட்டும் அல்ல, எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சரும் பதவி விலகி மக்கள் பக்கம் நின்று குரல் கொடுக்க வேண்டும். அடுத்த கட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் 1 வார காலம் மூடி போராட்டம் நடத்த வேண்டும்”என்றார்.

Related Tags :
Next Story