கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மாணவியிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர், பணிக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவசுபாஷ் (25) என்பவரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன் அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு, பிரிந்து விட்டனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சிவசுபாஷ், மாணவியை தடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு மாணவி மறுத்ததால், பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவி மன வருத்தத்துடன் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாணவி விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவிக்கு தொல்லை கொடுத்த சிவசுபாசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story