கழிவறை வசதியுடன் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அதிநவீன சொகுசு பஸ் இயக்கம்
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கழிவறை வசதியுடன் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது.
கோவை,
கோவையில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் ஏராளமான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் ‘பிளை பஸ்’ என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில், அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், கர்நாடக அரசு பஸ் கோவை கிளை மேலாளர் ரவி, ரெயில் பயணிகள் சங்க நிர்வாகி ஜமீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழக மேலாளர் ரவி கூறியதாவது:-
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை-பெங்களுரு சர்வதேச விமான நிலையத்துக்கு தினசரி மல்டி ஆக்சில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. குளு குளு வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் கழிவறை வசதி உள்ளது. மொத்தம் 72 இருக்கைகள் உள்ளன. ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் டெலிவிஷன் வசதி, வை-பை வசதி, உணவு பொருட்களை சூடு செய்ய ஓவன் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பகல் 12 மணிக்கு புறப்படும் அந்த சொகுசு பஸ் காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம், அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டல் ஆகிய இடங்களில் நிற்கும். அதன்பின்னர் கோவையில் இருந்து புறப்பட்டு சேலத்தில் நிற்கும். அதைத் தொடர்ந்து பெங்களூரு நகரம் வழியாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 8.15 மணிக்கு சென்றடையும். கோவை-பெங்களூரு இடையிலான கட்டணம் ரூ.890. பெங்களுரு விமான நிலையத்துக்கு ரூ.1,100 வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story