காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வர்த்தக சங்கத்தினர் சாலைமறியல் 50 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் வர்த்தக சங்கத்தின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதார பிரச்சினையாக காவிரி நீர் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக காவிரி நீருக்காக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கோர்ட்டு அளித்த காலகெடு முடிவடைந்ததால் காவிரி டெல்டா விவசாயிகள் செய்வது அறியாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குமரேசன், துணைத்தலைவர் ஆனந்த், துணை செயலாளர்கள் அண்ணாதுரை, உதயகுமார், நிர்வாகிகள் வரதராஜன், ராஜா, அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
50 பேர் கைது
தகவல் அறிந்ததும் திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் நாகை-தஞ்சை பைபாஸ் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story