கூட்டுறவு பண்டகசாலை தேர்தல் மனு தாக்கலில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மோதல்
புதுக்கோட்டை கூட்டுறவு பண்டகசாலை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் உள்ள புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில் இயக்குனர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சுமார் 10 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், அவர் உள்பட பலர் இயக்குனர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முன்னாள் நகர கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் பலர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் மற்றவர்களை உள்ளே விட வேண்டும் எனக்கூறினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன் மற்றும் போலீசார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை கூட்டுறவு பண்டகசாலைக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் டி.டி.வி. தினகரன் அணி ஆதரவாளர்கள் நகர செயலாளர் வீரமணி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்களையும் போலீசார் உள்ளே விடாமல் தடுத்தனர். இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் தண்ணீர் பாக்கெட்டுகள், கற்கள், நாற்காலிகள் போன்றவற்றை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் பலர் வந்தனர். அவர்களையும் போலீசார் கூட்டுறவு பண்டகசாலைக்குள் விடவில்லை. இதனால் தி.மு.க.வினருக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் தி.மு.க.வினரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கற்கள், நாற்காலி உள்ளிட்டவற்றை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கவிதைப்பித்தன் மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் கூட்டுறவு பண்டகசாலையில் முன்பு போலீசாரை கண்டித்தும், அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்தும், கவிதைப்பித்தனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.மு.க.வினர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே கல்வீசி தாக்குதல் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கு திரண்டு நின்றவர்களை கலைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டுறவு பண்டகசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, வேட்புமனுக்களை வாங்கும் அதிகாரி அங்கு இல்லை. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரம் ஆகியும் தேர்தல் அதிகாரி வராததால் தி.மு.க.வினர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், தொழிலதிபர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வினர் நகர கூட்டுறவு பண்டகசாலையில் இருந்து புதுக்கோட்டை அண்ணாசிலை வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அண்ணாசிலை பகுதியில் பட்டாசு வெடித்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கறம்பக்குடி அருகே உள்ள மனமடை காட்டாத்தி, பந்துவக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்காக ஏராளமானோர் அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அ.தி.மு.க.வினர் இடையே மட்டும் வேட்புமனுக்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினரிடம் வேட்புமனுக்களை பெறாமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை அதிகாரிகள் பெறாததால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் கூட்டுறவு சங்க அலுவலக சங்கங்களை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தி.மு.க.வினர் வேட்புமனுக்களை பெற்று கொண்டனர். இதையடுத்து அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Tags :
Next Story