கூட்டுறவு சங்க 2-ம் கட்ட தேர்தல்: வேட்பு மனு தாக்கலில் வாக்குவாதம், தள்ளு முள்ளு
கூட்டுறவு சங்க 2-ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கலில் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
குளித்தலை பகுதியில் 2-ம் கட்டமாக குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம், மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மற்றும் தண்ணீர்பள்ளியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய 4 சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க. சார்பில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. சார்பில் 15 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பம் பெறுவதற்காக அங்கு வந்தனர்.
அப்போது அவர்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் அ.தி.மு.க.வினர், போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசாரை கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சீட்டு பெறுவதற்காக அங்கு வந்து தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது, ஒப்புகை சீட்டு தராமல் அவர் காலம் தாழ்த்தியுள்ளார்.
அப்போது அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. வினரை அலுவலகத்திற்கு வெளியே தள்ளியதால் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என தி.மு.க.வினர் தெரிவித்துவிட்டு சிறிது நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க. சார்பில் 7 பேர், தி.மு.க. சார்பில் 5 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒருவர், சுயேட்சைகள் 10 பேர் என மொத்தம் 23 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். குளித்தலை நகர வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் அ.தி.மு.க. சார்பில் 11 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். தண்ணீர்பள்ளியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 7 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள கழுகூர், தோகைமலை, வடசேரி, பாதிரிபட்டி ஆகிய கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனர்களின் பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் வடசேரி சங்கத்திற்கு கே.ஆர்.விஜயன் தலைமையிலும், தோகைமலை சங்கத்திற்கு துரை தலைமையிலும், கழுகூருக்கு ராதாகிருஷ்ணன் தலைமையிலும், பாதிரிபட்டிக்கு ராஜேந்திரன் தலைமையிலும் ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு தலா 11 இயக்குனர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மொத்தம் 44 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும் தோகைமலை, கழுகூர், வடசேரி, பாதிரிபட்டி ஆகிய கூட்டுறவு சங்கத்தில் தி.மு.க. தரப்பில் குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரப்பில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பு மனு படிவங்களை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டனர். வேட்பு மனுக்கள் கூட்டுறவு சங்கத்தில் இருப்பு இல்லை என்றும், மேல் அதிகாரிகள் வேட்பு மனு படிவங்களை கொண்டு வந்து தந்தால் வேட்பு மனு படிவத்தை தங்களிடம் தருகிறோம் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். ஆனால் கடைசி வரை தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்தவர்களுக்கு வேட்பு மனு படிவத்தை அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனால் தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு கூட்டுறவு சங்கங்களில் கடைசி வரை மற்ற கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேட்பு மனு படிவங்கள் யாருக்கும் தராததால் ஏமாற்றத்துடன் சென்றனர். முன்னதாக வடசேரி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ. ராமர் வேட்பு மனு படிவம் அதிகாரிகளிடம் பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அ.தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து நாளை (திங்கட்கிழமை) அந்தந்த கூட்டுறவு சங்கத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story