காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் வள்ளுவர் கலையரங்கில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆர்.புதுப்பாளையம் தி.மு.க. செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார்.
தி.மு.க. அவைத் தலைவர் மணி என்கிற நல்லதம்பி, எம்.எம்.மணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, விவசாயிகள் சங்கத்தலைவர் பெரியதம்பி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரகஸ்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். அப்போது அவர்கள், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story