பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

முல்லுண்டு - மாட்டுங்கா
மத்திய ரெயில்வே வழித்தடமான முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.56 மணி வரை சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
எனவே விரைவு ரெயில்கள் இவ்விரு ரெயில்நிலையங்கள் இடையே உள்ள அனைத்து ரெயில்நிலையங்களிலும் நிறுத்தப்படும். பரேலுக்கு பிறகு ரெயில்கள் மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.
சேவை ரத்து
துறைமுக வழித்தடத்தில் குர்லா - வாஷி இடையே இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில்கள் இயக்கப்படாது. இதேபோல காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில் சேவை இருக்காது. எனினும் இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா மற்றும் வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேற்கு ரெயில்வேயில் இன்று பராமரிப்பு பணி எதுவும் நடைபெறவில்லை. எனவே மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story