மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியல்: தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா உள்பட 162 பேர் கைது

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ. உள்பட 162 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தெற்கு மாநில தி.மு.க.வினர் புதுவை பஸ் நிலையம் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மறியலில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நிர்வாகிகள் தைரியநாதன், சக்திவேல், முகமது யூனுஸ், மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக பஸ் நிலையத்திற்குள் இருந்து பஸ்களால் வெளியே வரமுடியவில்லை. மேலும் மறைமலையடிகள் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ. உள்பட 105 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அண்ணா சிலையருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட எஸ்.பி.சிவக்குமார் உள்பட 57 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். இரு போராட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வினர் 162 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story