மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியல்: கனிமொழி எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கைதாகி விடுதலை
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து நெல்லையில் சாலைமறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 202 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நெல்லை மாவட்டத்துக்கு வந்து இருந்தார். ஆயாள்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் கனிமொழி எம்.பி.க்கு தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே வந்தார். அதற்குள் அங்கு கட்சி தொண்டர்கள் கொடியுடன் திரண்டு நின்றனர். அங்கு கனிமொழி எம்.பி. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே, அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு உள்ளிட்ட கோஷங்களை தி.மு.க.வினர் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அப்போது கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலனுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் காலதாமதம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து உள்ளது தெளிவாகிறது.
மத்திய அரசின் இந்த முடிவை கண்டிக்கும் வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சிகள் சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், லட்சுமணன், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் (கிழக்கு), சிவபத்மநாதன் (மேற்கு), அப்துல்வகாப் (மத்திய மாவட்டம்), முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட 202 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 17 பேர் பெண்கள் ஆவர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக, மதியம் 1.15 மணி முதல் 1.30 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் மதியம் 2.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story