இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வந்தவாசி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அபாயகரமான நிலையில் உள்ளதால் அதனை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியத்தை சேர்ந்த மழையூர் அருகே உள்ளது தென்கரை கிராமம். இந்த கிராமத்தின் நுழைவுப் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம், பள்ளி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம், நாடக மேடை மற்றும் நெற்களம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றுக்கு அருகில் தெள்ளார் - தேசூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொட்டியில் இருந்து தென்கரை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 2 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 4 தூண்களிலும் உள்ள கம்பிகள் துருப்பிடித்து இருப்பதுடன், கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
இதற்கு மாற்றாக புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள், மாணவ - மாணவிகள் அதிகம் வரும் பகுதியாக இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றவும், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story