வைக்கோல் போருக்கு வைத்த தீயில் நாய் கருகி செத்தது போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 50). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் முன்பு உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். கொட்டகையின் அருகிலேயே வைக்கோல் போரும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் மாடுகள் கத்தின.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 50). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் முன்பு உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். கொட்டகையின் அருகிலேயே வைக்கோல் போரும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் மாடுகள் கத்தின. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று மாடுகளை அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வைக்கோல் போர் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் வைக்கோல் போருக்கு வைத்த தீயில் அதன் அருகில் படுத்து கிடந்த ஒரு நாயும் உடல் கருகி பரிதாபமாக செத்தது.
இந்த சம்பவம் குறித்து மாதையன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.