மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 30 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 30 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 11:00 PM GMT (Updated: 2 April 2018 9:28 PM GMT)

தோகைமலையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மெத்தனம் காட்டி வரும் மத்திய அரசை கண்டித்து குளித்தலை- மணப்பாறை சாலையில் தோகைமலை பஸ் நிலையம் அருகே தோகைமலை ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

30 பேர் கைது

இந்த மறியல் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது என்றும், தமிழக மக்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 30 பேரை தோகைமலை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் அவைத்தலைவர் பொன்னம்பலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை- மணப்பாறை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story