நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலில் சந்தனகுட ஊர்வலம்


நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவிலில் சந்தனகுட ஊர்வலம்
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

நடுவூர்க்கரை சிவசக்தி அம்மன் கோவில் திருவிழாவில் யானை மீது சந்தன குட ஊர்வலம் நடந்தது.

நாகர்கோவில்,

மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், ஆன்மிக உரை, சமய மாநாடு போன்றவை நடந்தது.

விழாவின் 9-வது நாளான நேற்று யானை மீது சந்தன குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

4 யானைகள்

தொடர்ந்து, கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து 4 யானைகளுடன் சந்தனகுட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நிழல் தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சிவராஜ், சடையன், நாகராஜன் மற்றும் சமுத்திரபாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம், லட்சுமிபுரம், பருத்திவிளை, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சன்னதி, மணலிவிளை, கோவிலான்விளை வழியாக நடுவூர்கரை சிவசக்தி அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் சுரேஷ்ராமன்நாடார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடு

விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சிவசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மதியம் அன்னதானம் போன்றவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 

Next Story