காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அருகில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை பாதுகாக்கும் வன்கொடுமை சட்டத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யாத மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் ஸ்டாலின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமேசுவரன், துணைத்தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் வானமாமலை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் மாரியப்பன், தனசிங் பாண்டியன், தருவை காமராஜ், ராஜீவ் காந்தி, சிவன்பெருமாள், சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story