காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர், ஏரல் பகுதியில் கடையடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர், ஏரல் பகுதியில் கடையடைப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:15 PM GMT (Updated: 3 April 2018 5:58 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர், ஏரல் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

திருச்செந்தூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி யும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தது. காமராஜர் சாலை, வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. கோவில் வாசல் பகுதியில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஏரல் மெயின் பஜார், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

குரும்பூரில் பெரும்பாலான கடைகள் பூட்டிக் கிடந் தன. எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, தென்திருப்பேரை, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

Next Story