காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழக உரிமைகளை நிலை நாட்டி தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை காக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் புதிய பஸ்நிலைய பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் தொட்டியம் சிவபதி, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிரணி, மாணவரணி, தொழிற்சங்க அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, ஜெயலலிதா பேரவை, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற தொலை தூரங்களுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் உண்ணாவிரதம் நடந்ததால் விரைவு பஸ்கள் உள்ளே நுழையும் பாதை அடைக்கப்பட்டு, புதிய பஸ்நிலையத்திற்குள் சென்று வெளியே செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டதால் அதன்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை சிறிய மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

Next Story