இரட்டை கொலை வழக்கு 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


இரட்டை கொலை வழக்கு 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வெங்கடேசன். மருமகள் சுதா. வெங்கடேசனின் தந்தை மாரிமுத்து, தாய் கலா, சித்தப்பா மாரி, சித்தி எல்லம்மாள் மற்றும் சகோதரி சித்ரா ஆகியோர் சுதாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மாரிமுத்து, கலா, மாரி, எல்லம்மாள், சித்ரா ஆகியோர் சுதாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாவின் கணவர் வெங்கடேசன் மனைவியை காப்பாற்ற முயன்றார்.

இதில் அவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். மதுராந்தகம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணைக்கு பின்னர் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மாரிமுத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டார்.

Next Story