இன்று முழு அடைப்பு போராட்டம்: குமரி மாவட்ட பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
முழு அடைப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி குமரி மாவட்ட பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
நாகர்கோவில்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் குமரி மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் அதரவு தெரிவித்துள்ளன. பஸ்கள், ஆட்டோ இயக்கப்பட்டால் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் இணைந்து நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எனவே பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இன்று ஓடுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
1,500 போலீசார் பாதுகாப்பு
இதுதொடர்பாக நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் இன்று (அதாவது நேற்று) இரவில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் நான் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் என அனைவரும் ஈடுபடுவோம். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கடும் நடவடிக்கை
மேலும் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ் மறியல் மற்றும் கடைகளை அடைக்கச்சொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் கூடும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் போன்றவற்றிலும், அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
பஸ்கள் இயக்கப்படும்
அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
போலீசார் இன்று (நேற்று) இரவு 9.30 மணிக்கு மேல் பஸ்களை நிறுத்துமாறும், இரவுநேர தங்கல் பஸ்களை பயணிகளை இறக்கிவிட்டதும் மீண்டும் டெப்போவுக்கு திரும்பச்செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
போலீசார், நாளை (இன்று) காலை எப்போது பஸ்களை இயக்க சொல்கிறார்களோ அப்போது முதல் பஸ்கள் இயக்கப்படும்.
முழு அடைப்பு போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும்தான் பங்கேற்பார்கள். அதனால் பஸ்களை இயக்க எந்த பிரச்சினையும் இருக்காது. போதுமான டிரைவர், கண்டக்டர்கள் உள்ளனர். அவர்களை வைத்து வழக்கம்போல் 100 சதவீதம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Related Tags :
Next Story