காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் செய்தனர். இதையடுத்து 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போதிய அழுத்தம் தராத தமிழக அரசை கண்டித்தும் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாட்ட தி.மு.க.செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்.எல்.ஏ., தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தி.மு.க.வினர் திடீர் என பஸ்நிலையம் முன்பு சாலைமறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கைது
இதில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், காதர்பாஷா, அரியப்பன், நாகேஷ், சின்னபில்லப்பா, ரகுநாத், வெங்கடேஷ், ஒசூர் நகர செயலாளர் மாதேஸ்வரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலைமறியல் செய்ததாக தி.மு.க.வினர் 300 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

Related Tags :
Next Story