காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் வரவேற்று பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின் (தி.மு.க.), பிரின்ஸ் (காங்கிரஸ்), காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தலைமை தாங்கி பேசிய சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறி விட்டது. தமிழக அரசு பிரதிநிதிகளை சந்திக்க மோடி மறுத்துள்ளார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்யும் போது, தி.மு.க. எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பா.ஜனதா துணையுடன் பாராளுமன்றத்தில் நாடகம் நடத்தி வருகிறார்கள்.
பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவேன் என்று கூறிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 4 ஆண்டுகள் ஆகியும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு சுரேஷ்ராஜன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கட்சி கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லைச் செல்வம், வக்கீல்கள் பாலஜனாதிபதி, உதயகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வளர் அகிலன், சேக்தாவூது, காங்கிரஸ் கட்சி சார்பில் என்ஜினீயர் அலெக்ஸ், சேம்மோகன் ராஜ், மகேஷ் லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தங்கமோகன், தி.க. மண்டல பொறுப்பாளர் வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story