பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது


பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2018 10:30 PM GMT (Updated: 4 April 2018 9:21 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் கட்சியினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் திரண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் கட்சியினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள், ஆதிதிராவிடர்-பழங்குடியினர்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை வலுவிலக்க செய்துள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைத்திட வேண்டும். வட மாநிலங்களில் ஆதிதிராவிட மக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் வீரசெங்கோலன், மாநில துணை செயலாளர் கராத்தே பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பாஸ்கர் மற்றும் உதயகுமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் உள்பட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை கைது செய்தனர். 

Next Story