கோலாரில் சிற்ப கலைஞர்களால் செதுக்கப்பட்ட 750 டன் எடைகொண்ட 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு வருகிறது
750 டன் எடைகொண்ட 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு நிறுவப்படும்.
பெங்களூரு,
கோலாரில் சிற்ப கலைஞர்களால் செதுக்கப்பட்ட 750 டன் எடை கொண்ட 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூருவுக்கு கனரக வாகனத்தில் கொண்டு வரப்படுகிறது. இந்த சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு(2019) நிறுவப்பட உள்ளது.
பெங்களூரு சர்வக்ஞநகர் அருகே காசரகானஹள்ளியில் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையை அமைக்க ஸ்ரீராம சைத்தன்யா வர்த்தினி அறக்கட்டளை முடிவு செய்தது. அதன்படி, கோலார் மாவட்டம் பைராப்புரா கிராமத்தில் 4 அடி ஆழத்தில் இருந்து சிலை செய்வதற்காக 1,450 டன் எடை கொண்ட பிரமாண்டமான ஒற்றைக்கல் வெட்டி எடுக்கப்பட்டது.
சிவராபட்டணா கிராமத்தில் உள்ள 30 சிற்பக்கலைஞர்கள் அந்த ஒற்றைக்கல்லில் ஆஞ்சநேயர் சிலை செதுக்கும் பணியை தொடங்கினர். மும்முரமாக ஆஞ்சநேயர் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் ஒற்றைக்கல்லின் எடையை 750 டன்னாக குறைத்தனர். மேலும், 62 அடி உயரத்தில் கலை நயத்துடன் ஆஞ்சநேயர் சிலை உருவானது.
கடந்த 1-ந் தேதி 300 டயர்கள் கொண்ட கனரக வாகனத்தில் ஆஞ்சநேயர் சிலை ஏற்றப்பட்டு பைராப்புரா கிராமத்தில் இருந்து பெங்களூரு காசரகானஹள்ளிக்கு பயணத்தை தொடங்கியது. இந்த சிலையானது இன்னும் 7 நாட்களில் காசரகானஹள்ளியை வந்தடையும். ஒசக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் சிலையை சுமந்து வந்த கனரக வாகனத்தை போலீசார் திடீரென்று தடுத்து நிறுத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சிலையை பெங்களூருவுக்கு எடுத்து செல்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர்கள் அறக்கட்டளையை சேர்ந்தவர்களிடம் கூறினார்கள். மேலும், சிலை இருந்த கனரக வாகனம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஆஞ்சநேயர் சிலையை பெங்களூருவுக்கு எடுத்து செல்ல அனுமதி பெற்றிருப்பது தெரியவந்தது. அதாவது, 750 டன் எடை கொண்ட ஆஞ்சநேயர் சிலையை கொண்டு செல்வதால் சாலைகள் சேதமடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். சாலைகள் சேதமடைந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளின் அனுமதியின் பேரில் ஆஞ்சநேயர் சிலையை சுமந்து வந்த கனரக வாகனம் ஒசக்கோட்டையில் இருந்து புறப்பட்டு பெங்களூருவை நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்த கனரக வாகனம் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்கிறது.
இந்த சிலை குறித்து அறக்கட்டளையின் உறுப்பினரான முனிராஜூ கூறுகையில், ‘750 டன் எடை கொண்ட ஒற்றைக்கல்லில் 62 அடி உயரம், 12 அடி அகலத்தில் பிரமாண்டமான அனுமன் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.10 கோடி செலவாகி உள்ளது. சிலையை சுமந்து செல்லும் கனரக வாகனத்தின் போக்குவரத்து செலவுக்காக ரூ.3½ கோடி செலவிடப்படுகிறது. சிலையை பெங்களூருவுக்கு கொண்டு வருவதற்கு வசதியாக பொதுப்பணித்துறை, பெங்களூரு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் அனுமதி வாங்கி இருக்கிறோம். காசரகானஹள்ளியில் வைத்து உலகளவில் புகழ்பெற்ற சிற்பிகளை கொண்டு சிலைக்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. அதாவது, ராமன் மற்றும் லட்சுமணன் ஆகியோரை ஆஞ்சநேயர் தனது தோளில் சுமந்து செல்வது போன்று இறுதி வடிவம் அமையும். இந்த சிலையின் முழுப்பணியானது அடுத்த ஆண்டு(2019) ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து, ஸ்ரீராமநவமி அன்று நிறுவப்படும்‘ என்றார்.

Related Tags :
Next Story