காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க., தோழமை கட்சியினர் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் ரெயில்-சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 1,255 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்,
காவிரிநீர் பங்கீட்டு பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் 5-ந்தேதி (நேற்று) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித் திருந்தனர்.
அந்தவகையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் உள்பட 201 கிராம ஊராட்சிகளிலும் உள்ள சுமார் 2,000 கடைகள் அடைக்கப்பட்டன. எப் போதும் பரபரப்பாக காணப்படும் அரியலூர் நகர் உள்பட மாவட்டத்தின் முக்கிய வீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடின. குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. ஆட்டோ, வேன் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் அவைகளும் இயக்கப்படவில்லை.
அரியலூர் நகராட்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் சில மருந்து கடைகளும் அடைக்கப்பட் டிருந்தன.
அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் கலைவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வநம்பி, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சின்னப்பா உள்பட அக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திரண்டனர். அவர்கள் காவிரி பிரச்சினையில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசையும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் மாநில அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மார்க்கெட் தெரு, சின்னகடைதெரு, பட்டுநூல்கார தெரு, ராஜாஜிநகர் வழியாக அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதையடுத்து அந்த ரெயிலை மறிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மற்றவர்கள் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் தடுப்புகளை அகற்றி விட்டு, ரெயிலை மறிக்க ஓடினர். இதையறிந்த அந்த ரெயிலின் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் அந்த ரெயில் முன்பு நின்று கொண்டு மத்திய அரசினை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 625 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆண்டிமடம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்தனர்.
தா.பழூர் இடங்கண்ணி பிரிவு சாலை கடைவீதியில் நேற்று அனைத்து கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தி.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் தா.பழூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை கைது செய்து, அருகே இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முழுஅடைப்பையொட்டி ஜெயங்கொண்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில், தோழமை கட்சியினர் ஊர்வலமாக ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் இலையூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி கடைவீதியில் நேற்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில், தோழமை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
உடையார்பாளையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனசேகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில், தோழமை கட்சியினர் கடலூர்-திருச்சி பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதேபோல் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், செந்துறை போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருமானூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி தலைமையில், தோழமை கட்சியினர் திருமானூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திருமானூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 187 பேரை கைது செய்தனர்.
திருமானூர் ஒன்றியத்தில் உள்ள திருமானூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர் மற்றும் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில மருந்து கடைகள், பழக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
அரியலூர் மாவட்டத்தில் ரெயில்-சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 1,255 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story