முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 506 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களான தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.யூ.சி. ஆகியவற்றின் நிர்வாகிகளும் கட்சி கொடிகளுடன் திரண்டனர். பின்னர் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் அங்கிருந்து ஊர்வலமாக வடசேரி நோக்கி புறப்பட்டனர்.
ஊர்வலத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், நாகர்கோவில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, தி.க. வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடசேரி நகராட்சி கலையரங்கம் அருகே ஊர்வலம் வந்தபோது அனைவரும் பாலமோர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 306 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 19 பேர் பெண்கள் ஆவர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸ் வாகனம் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு போலீசார் அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் நேற்று மாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில், வடசேரி அம்பேத்கர் சிலை அருகில் பாலமோர் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருமாவேந்தன் உள்பட 11 பேரை கைது செய்து, வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
குளச்சலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர், காமராஜர் பஸ்நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு நகர தி.மு.க. செயலாளர் நசீர் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் அர்ஜூனன், மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா ராபின்சன், முன்னாள் கவுன்சிலர்கள் லாரன்ஸ், சொர்ணம், ரகீம், சாதிக், மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் யூசுப்கான், கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஜோசப்மணி, நகர தலைவர் சந்திரசேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நசீம், த.மு.மு.க. தலைவர் சாகுல் அமீது, மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் மாகீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
அழகியமண்டபம் சந்திப்பில் தக்கலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் அவைத்தலைவர் ஜோசப்ராஜ், முளகுமூடு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோஸ் கிரேஸ்லின், பேரூர் செயலாளர் சுந்தர்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன் தி.மு.க. சார்பில், நகர செயலாளர் மணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மணவாளக்குறிச்சியில் சாலைமறியலில் ஈடுபட்ட வர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், தலைமைக்கழக பேச்சாளர் செல்வகுமார், பேரூர் செயலாளர் ஆலிவர்தாஸ், ஜெயக்குமார், ஒன்றிய பிரதிநிதி தாழக்குடி குமார், செண்பகராமன்புதூர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 இடங்களில் நடந்த இந்த மறியல் போராட்டம் தொடர்பாக 506 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story