காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நாகர்கோவில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு வணிகர் சங்க பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றன. குமரி மாவட்டத்திலும் பஸ் மறியல், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடந்தது.
இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் நகரில் நேற்று ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஓட்டல்கள், டீ கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்ற அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆவின் பாலகங்கள் அனைத்தும் திறந்திருந்தன. அதேபோல் நகரில் உள்ள ஒரு சில மருந்துக்கடைகள் மற்றும் பூக்கடைகள் திறந்திருந்தன. தெருக்களில் உள்ள ஒரு சில மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள் திறந்திருந்தன.
நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதி, கடைவீதி, மீனாட்சிபுரம் கடைவீதி, அண்ணா பஸ் நிலைய ரோடு, பாலமோர் ரோடு, மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, வடசேரி, கோர்ட்டு ரோடு, செட்டிகுளம் சந்திப்பு, கே.பி.ரோடு, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெருமளவில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடைவீதிகள், சாலைகள் அனைத்திலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன.
வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளும் இயங்கின. குமரி மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த போராட்டத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தமிழக பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஆனால் கேரள அரசு பஸ்கள் எல்லை பகுதியான இஞ்சிவிளை வரை வந்து திரும்பிச்சென்றது. தமிழக பகுதிக்குள் வரவில்லை. கேரள தனியார் பஸ்கள் தமிழக பகுதியான களியக்காவிளை பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிச்சென்றன.
குளச்சலில் அண்ணாசிலை சந்திப்பு, மெயின்ரோடு, துறைமுக சந்திப்பு, காந்தி முக்கு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கொல்லங்கோடு கண்ணநாதன் சந்திப்பு, தக்கலை, குலசேகரம், திருவட்டார், அழகியமண்டபம், கருங்கல், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் பேக்கரி, ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டத்தில் மார்க்கெட் சாலை பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
முழு அடைப்பையொட்டி நாகர்கோவில் நகரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள், சந்தைகள், கலெக்டர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story